ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி! வைரலாகும் வீடியோ பதிவு!

 
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி! வைரலாகும் வீடியோ பதிவு!


இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது இந்தியன் ரயில்வே. இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் இந்த ரயில் சேவை. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்யாண் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த ஒரு ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் அவசர அவசரமாக கீழே இறங்கினார்.


அப்போது அவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் உள்ள இடைவெளியில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயம் அங்கு வந்த ரயில்வே கான்ஸ்டபிள் உடனடியாக சமயோசிதமாக கர்ப்பிணிப் பெண்ணை கீழே விழாமல் காப்பாற்றினார். ரயில்நிலையத்தில் இதுகுறித்து பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


இந்நிலையில், மும்பை மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி இந்த சம்பவம் குறித்து தமது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் சிசிடிவி காட்சிகளை இணைத்து தயவு செய்து பயணிகள் யாரும் ரயில் நிற்பதற்கு முன் ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.சமயோசிதமாக அந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய ரயில்வே போலீசுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

From around the web