வறுமை நீங்கி வீட்டில் செல்வம் செழிக்க பெருமாள் வழிபாடு!

கடவுளை வழிபட எல்லா நாட்களும் உகந்த நாட்களே. இருந்தாலும் மனிதர்களின் செயல்களை நற்கதி அடையச்செய்யும் பொருட்டு அந்தந்த கிழமைகளில் வழிபடுவது என்பது கடைப்பிடிக்கிறது. அதன்படி வருடத்தின் எல்லா சனிக்கிழமைகளுமே பெருமாளை வழிபடவும், விரதமிருக்கவும் ஏற்ற நாளே. அதிலும் விஷ்ணுவிற்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைக்களில் வழிபாடு மற்றும் விரதம் இருப்பது மிகவும் விஷேசம்.
நமக்கு உகந்த ஏதாவது ஒரு புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை பூஜையறையில் வைத்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்கரிக்கவும். பெருமாள் துதிகள், விஷ்ணு சகஸ்கரநாமம் , விஷ்ணு பாடல்கள், வெங்கடேச அஷ்டகங்கள் பாடலாம். துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. பச்சரிசி மாவில் மாவிளக்கு ஏற்றி வைக்கலாம்.மாவிளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.
நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கலும், வடையும் செய்யலாம். பால் பாயாசம் அல்லது வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதம் இவற்றில் ஏதாவது ஒன்றை அன்புடன் அர்ப்பணித்தால் ஏற்றுக் கொள்வான் . பெருமாளுக்கு படையலிடும் போது “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷமிடுவது சிறப்பு. இருக்கும் இடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறிக் கொண்டே இருந்தால் போதும். விஷ்ணு அந்த இல்லத்தில் எழுந்தருள்வார் என்பது நம்மில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!