9ம் வகுப்பு ஃபெயிலானவர் வளர்ச்சிப் பாதை காட்டுவாரா? | பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!

 
பிரசாந்த் கிஷோர்
 

9ம் வகுப்பு ஃபெயில் ஆனவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுவாரா? என்று தேஜஸ்வி யாதவை பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர் புதிதாகத் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சி அடுத்த வருடம் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் பீகாரில் உள்ள போஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவை 9ம் வகுப்பு ஃபெயில் ஆனவர் என்று சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

'வசதிகள் இல்லாததால் சிலர் படிக்க முடியாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் முதலமைச்சரின் மகனாக இருந்துகொண்டு 10ம் வகுப்பை கூட தாண்ட முடியாமல் ஒருவர் இருந்தால் அது கல்வி குறித்த அவரின் கண்ணோட்டத்தையே உணர்த்துகிறது. 9ம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.

பிரசாந்த் கிஷோர்

தேஜஸ்வி யதாவுக்கு ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது. அப்படி இருக்கும்போது, பீகார் வளரும் என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். பீகார் முதல்வராகத் தனது தந்தை லாலு பிரசாத் சம்பாதித்த புகழைச் சார்ந்தே தேஜஸ்வி இருக்கிறார். அவர் மெரிட்டில் வந்த தலைவர் கிடையது. 10 நாட்களுக்கு டியூசன் சென்றாலும்கூட எந்த பேப்பரையும் பார்க்காமல் 'சோசியலிசம்' பற்றி 5 நிமிடம் கூட தேஜஸ்வியால் பேச முடியாது' என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web