தமிழக அரசியலில் பரபரப்பு... விஜய்க்கு எதிராக களமிறங்கும் பவர்ஸ்டார்!

 
விஜய்


 
தமிழ் திரையுலகில் விரும்பப்படும் நகைச்சுவை நடிகராக இருந்தவர்  பவர் ஸ்டார் சீனிவாசன்,  தன்னை கலாய்ப்பார்கள் என தெரிந்தே சினிமாவில் சில விஷயங்களை செய்து ரசிகர்கள் மத்தியில் கலாய் வாங்கியவர்.   இவரது பொதுவெளி பேச்சுக்கள் கூட சில சமயம் ரசிகர்கள் ரசிகர்களால் கேலிக்கு உள்ளாகும். இதனை தெரிந்து செய்கிறாரா அல்லது தெரியாமல் செய்கிறாரா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.
அப்படி தான் இன்று இவர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி பேசிய பேச்சுக்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பவர்ஸ்டார் சீனிவாசன், “தம்பி ஜோசப் விஜய் உங்களை நான் மதிக்கிறேன். அவர் உடன் நான் பேசியுள்ளேன். அவர் என் தம்பி மாதிரி தான் பார்க்கிறேன். ஒருமுறை நானும் அவரும் பேசிய போது அவர் என்னிடம், எனக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் என் பையன் உங்கள் ரசிகன் என கூறினார்.

விஜய்


நான் பார்த்த விஜய் ரொம்ப ரொம்ப  அமைதியானவர். ஆனால் இப்போது ரெம்ப பயங்கரமாக பேசுகிறார். பக்கம் பக்கமாய் டயலாக் பேசுகிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் வசனமெல்லாம் பேசுகிறார். முதலில் களத்திற்கு வாங்க. யார் வேண்டுமானாலும் கூட்டத்தை கூட்டி விட முடியும். நீங்கள் பேசுவதை சில மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எனக்கு கூட ஒரு காலத்தில் மக்கள் கூட்டம் கூடுவார்கள்.
அவர் 2026 ல் சட்டமன்ற தேர்தலில் எங்கு நின்றாலும், நான் எதிர்த்து நிற்பேன். பெரிய கட்சி கூப்பிட்டால் அவர்கள் சார்பாக நிற்பேன். இல்லை என்றால் சுயேட்சையாக எதிர்த்து நிற்பேன். கூட்டணி வேண்டாம் எனக் கூறுகிறார். நாளைக்கே திமுக போல பெரிய கட்சி வாய்ப்பு கிடைத்தால் அவர் ஓடிபோய்சேருவார். சும்மா பேசினால் போதாது. என்ன செய்ய போறார் என்பதையும், அவர்களின் கொள்கை என்ன என்பதையும் எடுத்து கூற வேண்டும்.

விஜய்
அதனை விடுத்து திமுகவை எதிர்த்து நிற்பேன். அவர்களை ஒழிப்பேன் என பேசி வருகிறார். அவர்களின் 50 வருஷ அரசியல் அனுபவம் தான், இவரது வயது. எடுத்தோம் கவிழ்த்தோம் எனப் பேச வேண்டாம். மானசீகமாக முதலமைச்சரை நான் நேசிக்கிறேன். அவரை எதிர்த்து பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலில் விஜய் நலிந்த நடிகர்களுக்கு, சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தருவாங்க. எனக்கு அதற்கும் மேல ரசிகர்கள் கூட்டம் இருந்தார்கள். நான் முதலில் அவரது தந்தையை எதிர்த்து சினிமா சங்க தேர்தலில் நின்றேன். இப்போது அரசியலில் அவரது மகனை எதிர்த்து நிற்க உள்ளேன். அவர் திமுகவிற்கு எதிரி என்றால் விஜய்க்கு நான் எதிரி. நான் அரசியலில் மட்டும் கூறுகிறேன். நான் அவருக்கு அரசியல் எதிரி எனக் கூறிவிட்டேன். என்னை அவரது ரசிகர்களிடம் இருந்து முதலமைச்சர் தான் காப்பாத்தணும். என்னை ஏகப்பட்ட பேர் மிரட்டி இருக்காங்க. அதுபோல மிரட்டல் வராதபடி முதலமைச்சர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறி பரபரப்பு கிளப்பியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web