குறிச்சிக்கோங்க மக்களே... நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? !
தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணி காரணமாக மாதம் ஒரு முறை மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 3ம் தேதி வெள்ளிக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகளை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ பகுதியில் வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புகடை, ஆத்துபாலம் பகுதி, உக்கடம் பகுதி, ராமநாதபுரம், சுங்கம், ரேஸ் கோர்ஸ், கலெக்டரேட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
வடசென்னை தொண்டியார்பேட்டை பகுதியில் திருச்சின்னக்குப்பம் மெயின் ரோடு, ராஜாக்கடை, அப்பர்சாமி கோயில் தெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, சந்நிதி தெரு, மாட்டு மந்தை, கன்னி கோயில், டி.எச்.ரோடு, சாத்தங்காடு மெயின் ரோடு, புது தெரு, வசந்தா நகர்,ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
மதுரை மாவட்டத்தில் விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி, பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர்: பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள்
மேல்வெங்கடபுரம்: கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்
முகுந்தராயபுரம்: நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்
மேல்பாடி: மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டார பகுதிகள் இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா