தள்ளிப்போகும் புஷ்பா-2 ரிலீஸ்❓

 
புஷ்பா2

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான  புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூல் சாதனை படைத்து ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து புஷ்பா2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  கடந்த ஒரு வருடமாக  படப்பிடிப்பு  நடந்து  வரும் நிலையில் நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உட்பட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.
புஷ்பா2புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றன.  ஆகஸ்டு மாதம் 15ம் தேதி சுதந்திரத் திருநாளில்  புஷ்பா-2 திரைப்படம் வெளியாகும் என  படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.

புஷ்பா ராஷ்மிகா

 இந்நிலையில் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா - 2' திரைப்படம்  டிசம்பரில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 2025 ஏப்ரலில் ரிலீசாகலாம் என  தகவல்கள் வெளியாகியுள்ளது. சில காட்சிகள் ரிஷூட் மற்றும் இறுதிகட்ட பணிகள் காரணமாக படம் வெளியீடு தள்ளிப் போயிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web