பிரபல ரவுடி சிடி மணி கைது.. குடும்பத்துடன் திருந்தி வாழுறான்.. கதறும் தந்தை!
சென்னையை கலக்கி வந்த பிரபல ஏ+ பிரிவு ரவுடி சி.டி.மணி சேலத்தில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக சி.டி.மணி மீது 10 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள் உள்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நண்பர் சி.டி.மணி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வழக்குகளில் தலைமறைவாகியதால் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதையடுத்து, தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சி.டி.மணியின் உயிரைக் காக்க அவரது தந்தை பார்த்தசாரதி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் சி.டி.மணி குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், போலீசார் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளதாகவும் கூறினார். பல ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்படுவதால், தனது மகன் தற்போது எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியாததால், தனது மகன் சி.டி.மணியின் உயிரைக் காப்பாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!