மோசமான காற்றின் தரம்.. பாகிஸ்தானில் ஊரடங்கு அறிவிப்பு!

 
பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பஞ்சாபில் தொடர்ந்து புகை மூட்டம் மோசமடைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை விடியற்காலையில், காற்றின் தரக் குறியீட்டில் நகரம் 2000ஐத் தாண்டியதால், முல்தான் நகரம் புகைமூட்டம் காட்சியளித்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு காற்று மாசு அளவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாபின் அனைத்து முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளதால், பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை நவம்பர் 17ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பல்வேறு நகரங்களில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான முல்தான், காலை 8 மணி முதல் 9 மணி வரை 2,135 என்ற காற்றின் தரக் குறியீட்டை (A(QI)) பதிவு செய்துள்ளதாக சுவிஸ் காற்றின் தர கண்காணிப்பு IQAir தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் ஒரு கன மீட்டருக்கு ஐந்து மைக்ரோகிராம் என நிர்ணயித்துள்ளது.

அபாயகரமானதாகக் கருதப்படும் காற்றில் உள்ள நுண்ணிய துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு 947 மைக்ரோகிராம்கள், இது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை விட 189.4 மடங்கு அதிகம். இதனால், சாலைகள் புகை மண்டலமாக காட்சியளித்தது. முன்னதாக, ஜிக் ஜாக் தொழில்நுட்பம் இல்லாமல் செயல்படும் செங்கல் சூளைகள் மற்றும் கழிவுகளை எரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. காற்றின் தரம் குறைந்ததால் தொண்டை வலி ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்கிடையில், லாகூரில் நள்ளிரவு 12 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 1,000க்கு மேல் பதிவானது. இது உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web