பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்வாதிகள்.. பகீர் கிளப்பும் நடிகை ராதிகா!

 
ராதிகா

மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், சில அரசியல்வாதிகள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து நடிகை ராதிகா கூறுகையில், நடிகைகளின் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் உள்ளன. நடிகைகள் உடை மாற்றுவது வீடியோவாக ரகசியமாக பதிவு செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்த திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. சில அரசியல்வாதிகளால் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். மலையாளப் படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது, ​​ஒரு கும்பல் உட்கார்ந்து தங்கள் தொலைபேசிகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. நான் பார்த்துவிட்டு கடந்து சென்றேன். பின்னர் இதுகுறித்து விசாரித்தபோது கேரவனில் ரகசியமாக கேமராவை பொருத்தி நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதனால், பயந்துபோய், நான் உடையை கேரவனில் மாற்றாமல் ஹோட்டல் அறைக்கு சென்றேன்.

இது குறித்து சக நடிகைகளை எச்சரித்தேன் .திரையுலகில் பாலியல் தொல்லைகளில் ஈடுபடுபவர்களை நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் கூறியத சரியான பதில் இல்லை. இது ஒரு தலைவரின் பேச்சு அல்ல. ஒரு யூடியூபர் நடிகைகளைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசுவதைப் பார்த்தேன். விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த யூடியூபரை செருப்பால் அடிக்கட்டும். என்னை அழைத்தால் துடைப்பத்துடன் வருவேன் என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web