காவல்துறையினரின் கேள்விகளுக்கு நாளைக்குள் பதில்... விஜய் கட்சி அறிவிப்பு!

 
தவெக
 

விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் 23ம் தேதி மாநாடு நடத்துவது குறித்து காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கும் நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் செப்டம்பர் 23ம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28ம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் வரும் பாதைக்கான ஏற்பாடு என்ன?, மாநாட்டிற்கு எத்தனை வாகனங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது? மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடு என்ன?

மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்பட உள்ளது?, மாநாடு முடிந்த பிறகு அங்கே இருக்கும் குப்பைகளை சுத்தம் எப்படி செய்வது? உட்பட மொத்தம் 21 கேள்விகளுக்கும் 5 நாட்களுக்குள் த.வெ.க தரப்பில் இருந்து பதில் அளிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

தவெக

இந்த சூழலில், காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி பதில் அறிக்கை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக வெற்றிக் கழக பதில் கூறி, அதற்கு காவல்துறை அனுமதி அளித்த பின்பு தான் மாநாடு நடைபெறும். எனவே, அனுமதி அளித்தபிறகு மாநாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web