காவலர் உடல் தகுதி தேர்வு.. 10 பேர் பரிதாப பலி.. சரமாரியாக குற்றம் சாட்டிய பாஜக!

 
போலீஸ் தேர்வு

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி, பலமு, கிழக்கு சிங்பூம், கிரிதி, ஹசாரிபாக், சாஹேப்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற கான்ஸ்டபிள் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் 10 பேர் உயிரிழந்ததற்கு பாஜக குற்றம்சாட்டியுள்ளது. துகுறித்து ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தேர்வில் பங்கேற்றவர்களை நள்ளிரவு முதல் வரிசையில் நிற்க வைத்து, மறுநாள் காலை கொளுத்தும் வெயிலில் ஓட வைத்தனர்.

கான்ஸ்டபிள் தேர்வு மையங்களில் போதிய சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். 10 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என்றும் அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

இந்நிலையில், காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சில மையங்களில் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் பங்கேற்ற சிலர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web