வருகை பதிவேட்டில் கையெழுத்திடாத ஊழியர்.. தட்டிக்கேட்ட அதிகாரி மீது சரமாரி தாக்குதல்..!

 
கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வேளாண் அதிகாரியை தாக்கிய  ஊழியரை காவல்துறையினர்  தேடி  வருகின்றனர். தூத்துக்குடியில்  வேளாண்மை  துணை இயக்குனர்  மனோரஞ்சிதம்   கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு  ஆய்வு பணிக்காக  சென்றபோது,  அங்கு பணிபுரியும்  ஊழியர்களின்  வருகை  பதிவேடுகளை    ஆய்வு  செய்துள்ளார்.

கோவில்பட்டி: பேருந்தின் மீது அதிவேகத்தில் மோதிய கார்... 3 கல்லூரி மாணவர்கள்  பலியான சோகம் | 3 students died when a car collided with a bus at high speed  in thoothukudi - Vikatan

அதில்  வட்டார  தொழில் நுட்ப மேலாளர் தனபாலன்  நீண்ட  நாட்களாக  வருகை  பதிவேட்டில்  கையெழுத்திடாமல்  இருந்துள்ளார். இதுகுறித்து  இயக்குனர்  மனோரஞ்சிதம்  கேட்டதற்கு  தனபாலன்   வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளார். பின்னர்  வாக்குவாதம் முற்றவே   அதிகாரியை   தனபாலன்  பலமாக தாக்கியுள்ளார்.

கோவில்பட்டி: கொடுக்காம்பாறை பஞ்சாயத்து தலைவரை கண்டித்து கிராம மக்கள்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்|Inshorts

இதனையடுத்து தாக்கப்பட்ட  அதிகாரியை   அங்கிருந்த  சக ஊழியர்கள்  மீட்டு  அரசு  மருத்துவமனையில்  சிகிச்சைக்காக   சேர்த்துள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  உயர்  அதிகாரியை  தாக்கிவிட்டு  தலைமறைவான  ஊழியர்  தனபாலனை  காவல்துறையினர்  தேடி வருகின்றனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web