பா.ம.க மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை!! 144 தடை உத்தரவு!! மாவட்டம் முழுவதும் பதற்றம்!!

 
பா.ம.க மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை!! 144 தடை உத்தரவு!! மாவட்டம் முழுவதும் பதற்றம்!!

தமிழகத்தில் சில மாதங்களாக இல்லாமல் இருந்த வெட்டு குத்து கலாச்சாரம் மீண்டும் மெல்ல தலைத்தூக்கியுள்ளது. சமீபத்தில் வடமாநில இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் காஞ்சிபுரத்தில் கொள்ளையில் ஈடுபட்டு பிடிபட்டனர். தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக அரசியல் தகராறு, ரியல் எஸ்டேட் தகராறு போன்றவற்றில் கொலைகள் அரங்கேறின. இந்நிலையில், பா.ம.க மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் காரைக்கால் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை!! 144 தடை உத்தரவு!! மாவட்டம் முழுவதும் பதற்றம்!!

புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தேவமணி (53) என்பவர், திருநள்ளார் பிரதான சாலை சுரக்குடி சந்திப்பு அருகே வசித்து வந்தார்.

அவரது கட்சி அலுவலகம் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அருகில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 10.20 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து அவர் தனது வீட்டுக்கு ஆதரவாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென தேவமணியை வழிமறித்து, சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். தலை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயமடைந்த தேவமணியை அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தேவமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

பா.ம.க மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை!! 144 தடை உத்தரவு!! மாவட்டம் முழுவதும் பதற்றம்!!

தேவமணி மீது ஏற்கனவே பலமுறை கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

From around the web