பரபரப்பான போர் சூழலில் உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா சென்றார். அப்போது ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 23-ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அவர் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார்.
உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார்.கடந்த மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியும், ஜெலென்ஸ்கியும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா