தனி விமானத்தில் நைஜீரியா புறப்பட்டார் பிரதமர் மோடி... 6 நாள் சுற்றுப்பயண முழு விபரம்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று நவம்பர் 16ம் தேதி தனி விமானத்தில் நைஜீரியா புறப்பட்டார். இன்று முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள் சுற்றூப்பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்குப் புறப்பட்டார்.
நைஜீரியா புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த சில நாட்கள், நான் நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா நாடுகளில் இருப்பேன். பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் உறவை மேம்படுத்த பலதரப்பு திட்டங்களில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரேசிலில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, கயானாவில் கரீபியன் நாட்டு தலைவர்களை சந்திப்பேன். இந்த பயணத்தின் போது வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் நான் உரையாடுவேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.
Over the next few days, I will be in Nigeria, Brazil and Guyana. I will have the opportunity to take part in a wide range of programmes, both bilateral and multilateral, which will add momentum to India’s ties with various nations. I will take part in the G20 Summit in Brazil and…
— Narendra Modi (@narendramodi) November 16, 2024
இந்திய பிரதமர் ஒருவர் 17 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக நைஜீரியா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நைஜீரிய வாழ் இந்தியர்களையும் சந்திக்க உள்ளார்.நவம்பர் 18ம் தேதி அங்கிருந்து பிரதமர் மோடி பிரேசில் செல்கிறார். அங்கு, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமையில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கு பன்னாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
பின்னர் கயானா நாட்டின் அதிபர் முகமது இர்ஃபான் அலியின் அழைப்பை ஏற்று நவம்பர் 19ம் தேதி கயானா செல்லும் பிரதமர் மோடி அங்கு அவருடன் சந்திப்பு நிகழ்த்துகிறார். இந்நிகழ்வில் இரு நாட்டு உறவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.1968க்கு பிறகு, இந்திய பிரதமர் கயானா செல்வது இதுவே முதல் முறையாகும். தனது 6 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நவம்பர் 21ம் தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!