இராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி... இன்று முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

பிரதமர் மோடி நாளை மறுநாள் ஏப்ரல் 6ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ராமேஸ்வரம் வருகை தருகிறார். முன்னதாக நாளை ஏப்ரல் 5ம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, அங்கிருந்து நேரடியாக பாம்பன் வந்தடைகிறார். ஏப்ரல் 6ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது.
இதேபோல, பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய இடங்களில் இருந்து இன்று ஏப்ரல் 4ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை குந்துகால் துறைமுகத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகுகளை பாம்பனை விட்டு அப்புறப்படுத்தி தங்கச்சிமடம் பகுதியில் நிறுத்தவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!