“தயவு செய்து படித்து முன்னேறுங்க...” மாணவர்கள் முன் 50 தோப்புக்கரணம் போட்டு கெஞ்சிய தலைமையாசிரியர்!

 
தோப்புகரணம்

மனைவி அமைவது மட்டுமல்ல... பள்ளியில் ஆசிரியர்கள் அமைவதும் அந்தந்த மாணவர்கள் செய்த தவத்தை பொறுத்தது தான். வீட்டை விட பெரும்பாலான நேரங்களை பள்ளியில் தான் மாணவர்கள் கழிக்கிறார்கள். மாணவர்களின் ஒழுக்கத்திலும், படிப்பிலும், அறிவாற்றலிலும் ஆசிரியர்களின் பங்கு பெரிது. அவர்களின் எதிர்கால வளமான வாழ்க்கைக்கு ஆசிரியர்களின் கற்றல் வழிக்காட்டுதலே மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், படிப்பில் ஆர்வமில்லாமல் இருக்கும் மாணவ, மாணவிகளிடம் எவ்வளவோ கெஞ்சி சொல்லிப் பார்த்தும், அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வராததாலும், நேரத்திற்கு பள்ளிக்கு வராததாலும் மாணவர்கள் எதிரே தோப்புக்கரணம் போட்டு நெகிழ செய்திருக்கிறார் அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர்.

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்புலி அருகே உள்ள பெண்ட கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். என்றாலும் இவர்களில் பலர் முறையாக பள்ளிக்கு வருவதில்லை, சரிவர படிப்பதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்பாக பல முறை சொல்லிப் பார்த்தும், படிப்பின் மீது கொஞ்சமும் அக்கறை செலுத்தாத மாணவர்களை, படிப்பின்  மீது கவனத்தை திருப்ப செய்ய கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனைத்து மாணவ, மாணவியரையும் வழக்கம் போல் பள்ளி மேடைக்கு முன் தலைமை ஆசிரியர் ரமணா வரச்சொன்னார்.

தோப்புகரணம்

அதன் பிறகு மாணவர்கள் முன்னிலையில் தரையில் விழுந்து அவர்கள் அனைவரையும் வணங்கியதுடன் அவர்கள் முன்னிலையில் 50 தோப்புக்கரணமும் போட்டார். பிறகு, "இனியாவது உங்களுக்காக நீங்கள் படியுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள்" என வருத்தத்துடன் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web