பிரியங்கா காந்தி 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி... உங்கள் அன்புக்கு நன்றி!

 
ராகுல் பிரியங்கா

 வயநாட்டில் பிரியங்கா காந்தி 6.22 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி 2.11 லட்சம் வாக்குகள் பெற்று பின்தங்கியும், பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 1.09 லட்சம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

2024 தேர்தலில் ராகுல் காந்தியின் 3.65 லட்சம் வாக்குகள் என்ற சாதனையை முறியடித்து, பிரியங்கா காந்தி 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இது குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் வயநாடு மக்களுக்கு என் நன்றி. நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்:  இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு நன்றி, மேலும் நீங்கள் எனக்கு அளித்த அபரிமிதமான அன்புக்கு ❤️❤️

பிரியங்கா தேர்தல்


என் சகோதரன் ராகுலுக்கு, நீங்கள் அனைவரையும் விட துணிச்சலானவர்... எனக்கு வழி காட்டியதற்கும், எப்போதும் என் பின்னால் இருப்பதற்கும் நன்றி: வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பிரியங்கா காந்தி எனப் பதிவிட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web