கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு ... பகீர் வீடியோ... !
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் , வெளிநாட்டினர் என வந்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் ஒரு மணிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கிழக்கு கோபுர வாசலில் மர்ம நபர் ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார்.
திடீரென அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை தரையில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். கையில் வைத்திருந்த பெட்ரோலை சிறுக சிறுக ஊற்றியதால் தீ கொழுந்துவிட்ட எரியத் தொடங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் மயிலாப்பூர் காவல்துறைக்கு தொடர்பு கொண்டனர்.
போலீசார் வந்து சேர்வதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க