பொதுமக்களே உஷார்... ‘கிஷான் யோஜனா’ திட்டத்தின் மூலம் மோசடி... சைபர் க்ரைம் எச்சரிக்கை!

 
சைபர் க்ரைம்

 தமிழகத்தில் சைபர் க்ரைம் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும்,  இந்த மாதம் மட்டும் 7 புகார்கள் வந்துள்ளதாகவும் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ பிரதம மந்திரியின் ‘கிஷான் யோஜனா’ என்ற திட்டத்தின் பெயரில் மோசடி செயலியை உருவாக்கி அதனை வாட்ஸ் அப் மூலம் மோசடி கும்பல் பகிர்கிறது.

சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் ‘சைபர் தடய ஆய்வகம்’

இந்த செயலியின் லிங்கை திறந்தால், பெயர், ஆதார் எண், பான் கார்டு, பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகள் மோசடி கும்பல் கைவசம் சென்றுவிடுகின்றன.  இந்த தரவுகள் மூலம் யு.பி.ஐ. செயலிகளை பயன்படுத்தி மோசடி கும்பல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. இந்த அதிநவீன மோசடி தாக்குதலால் நிதி இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.  அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் மீது தேவையில்லாத அச்சத்தையும் மோசடி கும்பல் உருவாக்கி உள்ளது.

 சைபர் தாக்குதல்
 இதுபோன்ற புதிய வகை மோசடியில் சிக்கி கொள்ளாமல் இருக்க, பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். செல்போன்களில் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.  நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரபூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web