சீமானோடு சமாதானம்?! வீரலட்சுமியை கண்டித்து விஜயலட்சுமி வீடியோ!!

 
சீமான்

.சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த நடிகை விஜயலட்சுமி விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தினம் ஒரு அறிக்கை, ஸ்டேட்மெண்ட் என இருவரும் பத்திரிகைகளின் பசிக்கு தீனி போட்டு வருகின்றனர். முதன் முறை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என விடுக்கப்பட்ட சம்மனை சீமான் பெற்றுக் கொள்ள முடியாது என திருப்பி அனுப்பி விட்டார். 
நேற்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு 2வது முறையாக சம்மன் கொடுக்க காவல்துறையினர் சென்ற போது வழக்கறிஞர் மூலம் சம்மனைப் பெற்றுக் கொண்டார்.  


 

பின்னர்  செப்டம்பர் 18 திங்கட்கிழமை கோர்ட்டில் நேரில் ஆஜராவதாக  தெரிவித்துள்ளார். அத்துடன்   தாம் விசாரணைக்கு ஆஜராகும் போது விஜயலட்சுமியும் வீரலட்சுமியும் வர வேண்டும் என்றும், 3  பேரிடமும் ஒன்றாக விசாரணை நடத்த வேண்டும் என நிபந்தனையும் விதித்துள்ளார்.  இது குறித்து வீரலட்சுமி முதலில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் நான் விஜயலட்சுமியுடன் விசாரணைக்கு வரத்தயார். அத்துடன்  புகார் கொடுத்த தேன்மொழியும்,  சீமானின் மனைவி கயல்விழியும் விசாரணைக்கு வரவேண்டும் எனக் கூறியிருந்தார்.  
இந்நிலையில் வீரலட்சுமியின் வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகை விஜயலட்சுமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சீமானுக்கு நிபந்தனை விதிப்பது குறித்து என்னிடம் ஆலோசித்தீர்களா என வீரலட்சுமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் விஜயலட்சுமி


இஷ்டத்திற்கு சீமானை எதிர்த்துக் கொண்டே போனால், நான் இந்த கேஸில் எதற்கு இருக்கிறேன் என காரசாரமாக கேட்டுள்ளார். அத்துடன்  செப்டம்பர்  18ம் தேதி சீமானை சந்தித்து, சமாதானம் ஆகி பெங்களூரு சென்றுவிடட்டுமா எனவும் கேட்டுள்ளார்.  இது என்னுடைய கேஸ், என்னிடம் கேட்காமல் வீரலட்சுமி அவுங்க ரூட்டில் போய்க்கிட்டு இருக்காங்க.. வீரலட்சுமி தன்னிடம் கேட்காமல் பேசிக் கொண்டிருந்தால் சீமானிடமும் நாம் தமிழர் கட்சியினரிடமும் சொல்லிவிட்டு பெங்களூரு சென்றுவிடுவேன் என விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web