உஷார்... ஆகஸ்ட் 30ம் தேதி பாஸ்போர்ட் சேவைகள் நடைபெறாது!

 
பாஸ்போர்ட்
 

ஆகஸ்ட் 30ம் தேதி பாஸ்போர்ட் சேவைகள் எதுவும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே இந்த தேதிகளில் நேர்காணலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வேறொரு நாள் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரப்படுகிறது.

பாஸ்போர்ட்

இது தொடர்பாக வெளியிடப்பட்ட  செய்திக்குறிப்பில், "இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 30.08.2024 (வெள்ளிகிழமை) அன்று ஒருநாள் மட்டும், அனைத்துவிதமான பாஸ்போர்ட் சேவைகள் வழங்கபடமாட்டாது. 

எனவே மதுரை மண்டல பாஸ்போரட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் கோச்சடை- மதுரை மற்றும் திருநெல்வேலி மேலும் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்கள் போடிநாயக்கனுர், கொடை ரோடு, தேவகோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், ராஜபாளையம், தூத்துக்குடி நாகர்கோவில் ஆகிய மையங்களில் 30.08.2024 (வெள்ளிகிழமை) ஒருநாள் மட்டும் பாஸ்போர்ட் சேவைகள் நடைபெறாது. 

பாஸ்போர்ட்

அன்றைய தேதிக்கு ஏற்கனவே முன் அனுமதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப முன் அனுமதியை மறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மதுரை பாரதி உலா வீதியில் இயங்கும் மண்டல பாஸ்போரட் அலுவலகத்திலும் விண்ணப்பதாரர்களுக்கான விசாரணைப் பிரிவு 30.08.2024 (வெள்ளிகிழமை) செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web