பயணிகள் அவதி... இன்று முதல் நெல்லை - திருச்செந்தூர் ரயில் முழுமையாக ரத்து!

 
ரயில் ரயில்வே நெல்லை திருநெல்வேலி தூத்துக்குடி
சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சுற்றுலா பயணிகளுக்குமே நெல்லை - திருச்செந்தூர் ரயில் அத்தனை பயனுள்ளதாக இருந்து வந்தது. நெல்லையில் இருந்து தினந்தோறும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் திருச்செந்தூர் செல்ல இந்த ரயிலைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று மார்ச் 16ம் தேதி முதல் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் ரயில் நிலையம் வரை சென்று, மீண்டும் மறுமார்க்கமாக திருநெல்வேலி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் அடுத்த 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ரயில் நிறுத்தம்

அதில்  நெல்லை - திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் திருச்செந்தூர் - நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்
இதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரயிலும் போத்தனூரில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரயிலும் இன்று மார்ச் 16ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web