நவம்பரில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! மோதலுக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!

நவம்பரில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! மோதலுக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்த பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நவம்பர் 4வது வாரம் முதல் ஒரு மாத காலம் நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா பரவல் குறைந்த போதிலும் கட்டுப்பாடுகளுட்ன கூட்டத்தொடர் நடத்தப்படும்.

நவம்பரில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! மோதலுக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடர் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்ததால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடரின் நாட்களும் குறைக்கப்பட்டன.

நவம்பரில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! மோதலுக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்ற போதிலும் நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 வரை கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.குளிர்கால கூட்டத்தொடர் காலகட்டத்தில் முகக்கவசம், சமூக இடைவெளியில் இருக்கைகள், உள்நுழைபவர்கள் கொரோனா பரிசோதனை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பரில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! மோதலுக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!

இந்தியா முழுவதும் 2024ல் பொதுத் தேர்தல் , 5 மாநில சட்டசபை தேர்தல் இவைகளின் அடிப்படையில் தற்போது நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

From around the web