ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி.. அருவிகளில் குளிக்க தடை!

 
ஒகேனக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

அதே சமயம் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 3 வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஃபெங்கல் புயல் காரணமாக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 43,000 கனஅடி வரை அதிகரித்து இருந்தது.

ஒகேனக்கல் காவிரி

நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த காரணத்தால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கன அடியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து  இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 21000 கன அடியாக அதிகரித்தது.

இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு கடந்த இரண்டு நாட்களாக விதிக்கப்பட்டு இருந்த தடையை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நீக்கியதை அடுத்து, சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூட்டாறு, மணல்மேடு வரை பரிசல்கள் ஏற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒகேனக்கல் வந்திருந்த சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.

ஒகேனக்கல்

இருப்பினும் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து 3வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வளத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web