பெற்றோர்களே உஷார்... சாக்லேட் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை... இளைஞரைத் துவைத்து போட்ட பொதுமக்கள் !
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. அதே சமயம், எனக்கென்ன என்று ஒதுங்கி செல்லாமல் நடைபெறும் குற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பவும், பெண்களைப் பாதுகாக்கும் போக்கும் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, காவல்நிலையம், கோயில், உறவினர், நண்பர்கள், பக்கத்துவீடு, நெருங்கிய தோழியின் வீடு என்று எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்கிற அவல நிலை தான் நீடித்து வருகிறது.
இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். அதே சமயம் பெண்களை மதிக்க ஆண் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே கற்றுத் தர வேண்டும். நிறைய பெற்றோர்கள் இந்த இடத்தில் தான் தவறிவிடுகிறார்கள். பெண்களைப் போற்ற வேண்டாம்.. சரிசமமாக மதிக்க கற்றுக் கொடுத்தாலே இந்த சமூகம் முன்னேறும்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் அவுக்கு மண்டலம் காசிபுரம் கிராமத்தில் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியை, அதே கிராமத்தை சேர்ந்த தாசய்யா என்பவர் சாக்லேட் தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதைச் சற்றும் எதிர்பாராத சிறுமி, அலறியடித்து சத்தம் போட்டிருக்கிறார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் தாசய்யாவை துரத்திப் பிடித்தனர். அதன் பின்னர் இது அந்த ஊர் இளைஞருக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று தாசய்யாவைக் கட்டி வைத்து பொதுமக்கள் அனைவருமே சேர்ந்து துவைத்தெடுத்தனர். அதன் பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தாசய்யாவை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா