பெற்றோர்களே உஷார்.. கவனமா இருங்க.. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

 
ரிஷிவந்த் 

புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், கதிரிமங்கலத்தை அடுத்த ராஜாகவுண்டர் வட்டம் சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மனைவி அசின். இவர்களுக்கு அஷ்வந்த் (3), ரிஷிவந்த் ஒன்றரை வயதில் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஞானசேகர் தனது வீட்டின் அருகிலேயே புதிதாக மற்றொரு வீடு கட்டி வந்துள்ளார். வழக்கம் போல் அவரது மனைவி அசின், தனது மூத்த மகனை நேற்று காலையில் பள்ளிக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

பின்னர், புதிதாக கட்டப்பட்ட வீட்டில் ஞானசேகர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தனியாக இருந்த ஒன்றரை வயது சிறுவன் ரிஷிவந்த், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். பல்வேறு இடங்களில் நீண்ட நேரம் தேடியும் குழந்தையை காணாததால் தண்ணீர் தொட்டிக்குள் புகுந்து பார்த்த போது ரிஷிவந்த் கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாரும் இல்லாத நேரத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தை இறந்ததால் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை பதற வைத்தது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web