பாராலிம்பிக்.. இந்தியா தங்கம் வென்றது.. ஒரே நாளில் இரு பதக்கங்கள் வென்று அசத்தல்!

 
 அவானி லெகாரா

பாரிசில் நடந்த ஒலிம்பிக் தொடர் சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், பாராலிம்பிக் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவானி லெகாரா மற்றும் மோனா அகர்வால் கலந்து கொண்டனர். அவனி லெகாரா 2வது இடத்தையும், மோனா அகர்வால் 5வது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதையடுத்து இறுதிப்போட்டி தொடங்கியது. அவனி லெகரா ஆரம்பம் முதலே முதலிடத்தில் இருந்து வருகிறார். அதேபோல், மோனா அகர்வாலும் முதல் 3 இடங்களிலிருந்து நழுவவில்லை. இந்தியா 2 பதக்கங்களை நிச்சயம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அவனி லெகாரா 145.9 புள்ளிகளும், மோனா அகர்வால் 144.8 புள்ளிகளும் பெற்று இந்தியாவுக்கு 2 பதக்கங்களை உறுதி செய்தனர். மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் வெளியேறி வெண்கலம் வென்றார். இந்தியாவின் அவனி லெகாரா 249.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

அதுமட்டுமின்றி அவனி லெகாரா 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச்1 பிரிவில் 249.7 புள்ளிகள் பெற்று பாராலிம்பிக் தொடர் சாதனை படைத்தார். 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வேறு எந்த பாராலிம்பிக்ஸும் இவ்வளவு புள்ளிகளைப் பெற்றதில்லை. தங்கப் பதக்கம் வென்றவரும் சாதனை படைத்தவருமான அவனி லெகாரா உற்சாகத்தில் கைகளை உயர்த்தி கொண்டாடினார்.

இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் தொடரின் 2வது நாளில் 2 பதக்கங்களை வென்று பதக்க எண்ணிக்கையை இந்தியா தொடங்கியது. இதனால், ஏராளமான ரசிகர்கள் அவனி லெகாரா மற்றும் மோனா அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதக்கங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web