பகீர்... தந்தை கண்முன்னே 19 வயது இளம்பெண் பேருந்தில் சிக்கி பலியான சோகம்!

 
ஸ்வேதா

பெரும் அதிர்ச்சியாக தந்தை கண்முன்பாகவே 19 வயது இளம்பெண், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.

வேலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது மகள்களுடன் வெங்கடேசன் ராணிப்பேட்டைக்கு சென்றுள்ளார். இவர்களது வாகனம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  வேலூரை அடுத்துள்ள பெருமுகை  பாலதிற்கு அருகே சென்று கொண்டிருந்த போது தனியார் பேருந்து ஒன்று பயங்கர வேகத்தில் இவர்களது வாகனத்தின் மீது மோதியது. அங்கே பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால் ஓரமாக வந்த  தனியார் பேருந்து, வெங்கடேஷின் இருசக்கர வாகனத்தில் மோதியதாக தெரிகிறது. இதனால்  இருசக்கர வாகனத்தில் இருந்து வெங்கடேஷனும் அவரது 2 மகள்களுமாக  3 பேரும்  நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் வெங்கடேசனின் 2வது மகள் 19 வயது ஸ்வேதா மீது தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதனால்  தந்தை கண்முன்னே சம்பவ இடத்திலேயே மகள் ஸ்வேதா துடிதுடித்து உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  

ஆம்புலன்ஸ்
இதனைப் பார்த்து வெங்கடேசனும், மற்றொரு மகளும் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் . ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து

சென்னை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில்  24 மணி நேரமும் போக்குவரத்து இருந்துக்கொண்டே இருக்கும்.  இந்த பகுதியில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் நடைபெறும் பாலம் கட்டுமான பணி  நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இதனால்  வழக்கத்தை காட்டிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.  இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.  ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web