பாலத்தின் சுவரில் வண்ணம் தீட்டும் பணி... மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

 
பாலம்

தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுண்டானவில் பாலத்தின் சுவரில் வண்ணம் தீட்டும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

பின்னர் மேயர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக முத்தையாபுரம் ரவுண்டானாவில் தூத்துக்குடி மாநகராட்சியும் ஸ்பிக் நிறுவனமும் இணைந்து பாலத்தின் சுவற்றில் வண்ணம் தீட்டும் பணிகளும் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. அந்தப் பணிகளையும் எம்டிஏ காலனி பகுதியில் நடைபெற்று வரும் புதிய பூங்கா பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்றார். 

தூத்துக்குடி

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web