விண்வெளி தொடர்பான ‘ஆர்பிட்டல்’ நாவல்.. புக்கர் பரிசை வென்றார் பிரிட்டீஷ் எழுத்தாளர்!

 
 சமந்தா ஹார்வி

பிரிட்டிஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்விக்கு (49) 2024-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு, விண்வெளி தொடர்பான தனது ‘ஆர்பிட்டல்’ நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஓல்ட் பில்லிங்ஸ்கேட்டில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் புக்கர் பரிசு வென்ற சமந்தா ஹார்விக்கு ரூ.54 லட்சம் (அமெரிக்க டாலர் 64,000) வழங்கப்பட்டது. பரிசு வென்றவர்களில் மார்கரெட் அட்வுட், சல்மான் ருஷ்டி மற்றும் யான் மார்டெல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பரிசை வழங்கிய நீதிபதி எட்மண்ட் டி வால் கூறுகையில், கோவிட்-19-ன் தாக்கத்தால் உலகம் பாதிக்கப்பட்டபோது சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடந்த ஒரு நாளைப் பற்றிய கதையாக சமந்தா ஹார்வி இந்த நாவலை எழுதினார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அவர் எழுதிய 5வது நாவல் இதுவாகும். இறுதிப் போட்டிக்கு வந்த 6 பேரில் இவரது நாவல் அதிகம் விற்பனையானது. மேலும் கடந்த 3 வருடங்களில், புக்கர் பரிசு வென்றவர்களை விட அவரது நாவல் அதிக பிரதிகள் விற்றுள்ளது.

விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமியின் அழகை அவர் சித்தரித்ததை வாசகர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். நீதிபதி எட்மண்ட் டி வால், அவரது வரிகள் நமக்கு உலகை விசித்திரமாகவும் புதியதாகவும் காட்டுகின்றன என்றார். சமந்தா ஹார்வி கூறுகையில், "கோவிட்-19 முழுவதுமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் நான் வீட்டில் இருந்தபோது நாவலை எழுதினேன்.  விண்வெளி வீரர்கள் சுற்றிவருகிறார்கள் என்று விளக்கினேன். உலகம் பதினாறு சூரிய உதயங்களையும், பதினாறு சூரிய அஸ்தமனங்களையும் கண்டு, இந்த நாவல் புக்கர் பரிசை வென்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web