அச்சச்சோ... புயல் சின்னம் உருவாகிறது... தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு... நவம்பரில் 60% அதிக மழைக்கு வாய்ப்பு!

 
புயல்

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாளை  முதல் நவம்பர் மாதம் துவங்குகிறது. இந்த நவம்பர் மாத துவக்கம் ஆரம்பமே அதகளமாக தமிழகத்தில் வழகத்தை விட 60 சதவீதம் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நவம்பர் 20ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதிக்குள் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

நவம்பர் 5ம் தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கும் நிலையில், வழக்கமாக நவம்பரில் தமிழ்நாட்டில் சராசரியாக 19 செ.மீ. மழை பதிவாகும் என்றும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 25 செ.மீ. முதல் 30 செ.மீ. வரை 4 சுற்றுகளாக மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது இயல்பைவிட 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை அதிக மழை ஆகும்.

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை !

இது மட்டுமல்லாமல் வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதிக்குள் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் குறுகிய காலத்தில் இயல்பைவிட அதிகமான மழையும் பதிவாகும் என்றும் கணித்துள்ளனர்.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட கடலோர, டெல்டா மாவட்டங்களில் குறுகிய காலத்தில் பெருமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

இதே போல், தென் கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நவம்பரில் இயல்பு அல்லது இயல்புக்கு அதிகமாக மழை பதிவாகக் கூடும் எனவும், ஓரிரு இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மிதக்கும் வாகனங்கள் மழை வெள்ளம்

வருகிற நவம்பர் 10ம் தேதியையொட்டி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதகமான சூழல் காணப்படுவதாகவும், அது மேலும் வலுவடைந்து பருவமழையை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், அதிலும் நவம்பர் 20ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதிக்குள் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி தமிழ்நாட்டின் வடகடலோரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web