ஒரு கிலோ வெங்காயம் ரூ.845... காசாவில் கதறும் மக்கள்... நாளொன்றுக்கு ஒருவேளை தான் உணவு!
ஒரு கிலோ வெங்காயம் ரூ.845. ஒரு ரொட்டித் துண்டு ரூ.73. அதுவும் நிச்சயமில்லை. நாளொன்றுக்கு ஒரு வேளை தான் சாப்பிட முடிகிறது. அதுவும் எந்த வேளை அந்த உணவு கிடைக்கும் என்பது நிச்சயமில்லை என்று காசாவில் மக்கள் கதறுகின்றனர். இத்தனை நாடுகள் வல்லரசு என்று பெருமை பேசியும் ஓராண்டு காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் இஸ்ரேல் காசா போர் பதற்றத்தை தீர்த்து முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.
இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. மக்கள் பசி மற்றும் பட்டினியால் அவதிப்படுகின்றனர். தெற்கு காசாவில் உள்ள நிவாரண முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உணவு அளித்தாலும், அதை பெற பலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கிடைக்கும். உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பசி மற்றும் பட்டினியால் அவதிப்படுகின்றனர்.
மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு ரொட்டி பாக்கெட்டின் விலை (15 ரொட்டி துண்டுகள் கொண்டது) ரூ. 1100. சராசரியாக ஒரு ரொட்டி துண்டு மட்டும் 73 ரூபாய். ஒரு கிலோ வெங்காயம் ரூ. 845 ஆகவும், சமையல் எண்ணெய் உச்சத்தில் ரூ. 1,267. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாடற்ற விலைகள் போன்றவற்றால் காஸா மக்களின் நிலை உலகையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடா ஒரு காலத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக உலகெங்கிலும் இருந்து புலம் பெயர்ந்த மக்களின் கனவு நாடாக இருந்தது. இப்போது நிலைமை வியத்தகு முறையில் மாறிவிட்டது. பல்வேறு தவறான முடிவுகளால், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கனடா கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
மளிகை பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், 25 சதவீத கனேடியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மளிகை மற்றும் வாடகை விலை அதிகரித்துள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாடகை உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட தங்கள் மளிகைச் செலவைக் குறைத்துள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!