ரூ1,00,00,000/- பரிசா தர்றேன்... என் மகன கண்டுபிடிச்சு கொடுங்க... சைதை துரைசாமி அறிவிப்பால் பரபரப்பு...!

 
சைதை துரைசாமி

சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவர் சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன்   வெற்றி துரைசாமி . இவர் திருமணத்திற்கு பிறகு  மனைவி மற்றும்  2  ஆண் குழந்தைகளுடன் தாம்பரத்தில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.  சினிமா தயாரிப்பாளர்  வெற்றி துரைசாமி, த்ரில்லர் படத்தை  தயாரிக்க திட்டமிட்டு இருந்தார்.  அப்படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு  சென்றுள்ளார்.  இதன் படி பிப்ரவரி 4ம் தேதி  வாடகை கார் ஒன்றை எடுத்துக் கொண்டு வெற்றி துரைசாமி மற்றும் அவரது உதவியாளர் கோபிநாத்   இருவரும் இமாச்சலப் பிரதேசம் கஷாங் நாலா மலைப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர்.


அங்கு மலை மீது சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அதில்  அருகே உள்ள பள்ளத்தில் உருண்டு சட்லஜ் நதியில் விழுந்து மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த சுற்றுலாப் பயணிகள் அளித்த தகவலின் பெயரில்  போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து கார் ஓட்டுநர்  உடலை சடலமாக மீட்டனர். அவருடைய நண்பர்  கோபிநாத்தை  படுகாயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கோபி மேல் சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விபத்தில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் நடைபெற்றன.  

வெற்றி துரைசாமி
24 மணி நேரத்திற்கும் மேலாக படகு மூலமாக தேடி வந்த நிலையில் இதுவரை மாயமான வெற்றியை கண்டுபிடிக்க முடியவில்லை.  சைதை துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு விரைந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடி வரும் நிலையில், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தேடும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  
 வெற்றி துரைசாமி காரின் பின் இருக்கையிலும் உதவியாளர் முன் இருக்கையிலும் அமர்ந்துள்ளனர்.  உதவியாளர் மற்றும் ஒட்டுநர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் விபத்தின் போது  காருடன் நதியில் விழுந்ததும் வெற்றி துரைசாமி பின் இருக்கையில் அமர்ந்து சென்றதால் விபத்து ஏற்பட்டு கார் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. அப்போது கார் கதவு திறந்தால் வெற்றி தூக்கி வீசப்பட்ட நிலையில் விழுந்தது தெரியவந்தது.  இந்நிலையில் காணாமல் போன வெற்றி துரைசாமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.  இது குறித்து வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும்   சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web