ஒன்றரை வயது குழந்தை பிரிட்ஜை தொட்டதால் உயிரிழந்த பரிதாபம்!

 
ஒன்றரை வயது குழந்தை பிரிட்ஜை தொட்டதால் உயிரிழந்த பரிதாபம்!

கேரளாவில் திருவனந்தபுரம் கோட்டயத்தில் உள்ள குரவிலங்காடு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் அலல் – ஸ்ருதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரூத் மரியம் என்ற பெண்குழந்தை உண்டு. இந்தக் குழந்தை மாலை நேரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது, ஒளிந்து கொள்வதற்காக வீட்டில் இருந்த பிரிட்ஜின் பின்னால் சென்றுள்ளார். பிரிட்ஜின் பின்னால் இருக்கும் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத பெற்றோர் குழந்தை அங்கு சென்றதை கவனியாமல் அவர்களின் வேலைகளில் பிசியாக இருந்துள்ளனர்.

ஒன்றரை வயது குழந்தை பிரிட்ஜை தொட்டதால் உயிரிழந்த பரிதாபம்!


பிரிட்ஜின் ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தை அலறலுடன் தூக்கி வீசப்பட்டது. பெற்றோர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.