ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மீண்டும் எகிறியது... நாளை முதல் தொடர் விடுமுறை!

 
koyambedu bus stand ஆம்னி பஸ்
தமிழகத்தில் கடந்த வாரத்தில் ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி, அடுத்து பங்குனி உத்திரம், அதற்கடுத்தபடியாக சனி ஞாயிறு வார விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறை தினங்களாக அமைந்ததில் பலரும் சொந்த ஊர் நோக்கி படையெடுத்தனர். சுற்றுலா தலங்களும் நிரம்பி வழிந்தது. அதன் பின்னர் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால் மக்கள் மகிழ்ந்தனர். இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னை திரும்புவதற்கு ஆம்னி பேருந்துகளில் ரூ.6,000 வரையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் இது குறித்து புகார் தெரிவித்து வந்தனர்.

விடுமுறை

மீண்டும் இந்த வாரமும் வரும் வெள்ளிக்கிழமை முதல் சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்துள்ளன. 

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

ஏப்ரல் 18ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. அதே போன்று வார விடுமுறையாக சனி ஞாயிறு பொது விடுமுறை தினங்கள் என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ளன. ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், பலரும் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆம்னி பேருந்துகளில் தற்போது மீண்டும் இன்று மாலை தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே வரும் ஞாயிறு அன்று, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web