எம்.எல்.ஏவுக்கு காலணி அணிவித்த செவிலியர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!

 
 எம்எல்ஏ ராஜகுமார்

மயிலாடுதுறை ​​மருத்துவமனையை ஆய்வு செய்யச் சென்ற எம்எல்ஏ ராஜகுமார், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அறுவை சிகிச்சை அரங்கின் வெளியே காலணிகளைக் கழற்றிவிட்டு, வெறுங்காலுடன் உள்ளே சென்றார். அப்போது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த காலணிகளை எடுத்து எம்எல்ஏவின் கால் அருகே வைத்தார். இந்த ஆய்வின் வீடியோ எம்எல்ஏ ராஜ்குமாரின் முகநூல் பக்கத்தில் நேரலையாக வெளியான நிலையில், தற்போது செவிலியர் மட்டும் காலனியை எடுத்து எம்எல்ஏவிடம் கொடுப்பது போல் எடிட் செய்யப்பட்டு எம்எல்ஏவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



இதற்கு தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எச்.ராஜா தனது X தளத்தில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து,  தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாத பூஜை செய்து அவர்களை கெளரவிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். பள்ளி குழந்தைகளுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு நற்பண்புகள் குறித்து உபதேசிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவரை தனது காலணியை எடுத்து தனது கால் பாதத்தின் அருகில் வைக்க வைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மோசமான செயலை பாருங்கள்..!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவருமான திரு.ராஜ்குமார் MLA அவர்கள் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவரை தனது செருப்பை எடுக்க வைத்து தனது கால் பாதத்தின் அருகில் வைக்கச் செய்த வேதனைக்குரிய நிகழ்வைத்தான் இந்த காணொளியில் நாம் அனைவரும் பார்க்கிறோம். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்ற மகாகவி பாரதியார் பிறந்த மண்ணில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று திருமதி.சோனியாகாந்தி அவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கற்றுத் தரவில்லை போலும்!  பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஹெச் ராஜா

இதுகுறித்து எம்எல்ஏ ராஜகுமார் கூறுகையில், எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றன. குறிப்பாக ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழையும் முன் காலணிகளை மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே வைத்துவிட்டு சென்றபோது, ​​அங்குள்ள செவிலியர் எதிர்பாராதவிதமாக அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தக்கூடிய காலணிகளை எடுத்து என்னிடம் கொடுத்தார். நான்   மறுத்துவிட்டேன். இருந்த போதிலும், நடந்த செயலை தவறாக சித்தரித்து அற்ப அரசியல் நடத்துகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web