பக்தர்கள் பரவசம்... இனி தினமும் சதுரகிரி கோயிலுக்கு செல்லலாம்!

 
சதுரகிரி


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி ஆலயம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அமைந்துள்ளது.   உலகப்பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவில்  கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 

சதுரகிரி

இந்த கோயிலுக்கு  கடந்த காலங்களில்  தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில்,   2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்  10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி   விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

சதுரகிரி

இந்நிலையில் இனி சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் தினமும்  செல்லலாம்  என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரட்டுமே சோதனை சாவடி வழியாக அனுமதி எனவும், மாலை 4 மணிக்குள் திரும்ப வேண்டும் எனவும்  மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உரிய அனுமதியின்றி மலையில் தங்கியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web