இனி லட்டு வாங்க ஆதார் கட்டாயம்... திருப்பதி தேவஸ்தானம் திடீர் உத்தரவு!
இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு தினசரி 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் லட்டு வேண்டுபவர்கள், ரூ.50 செலுத்தி லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இருப்பினும், இடைத்தரகர்கள் மூலம் லட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான், திருப்பதி தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் எனவும், ஆதார் காண்பித்தால் கூடுதலாக ஒரு லட்டு ரூ.50க்கு வழங்கப்படும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!