வடமாநில பெண்ணை பீர் பாட்டிலால் தாக்கிய விவகாரம்.. கணவன், மனைவி அதிரடியாக கைது!
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 20ம் தேதி புகார் அளித்தார். அதில்,சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாண்டுராஜ் (28) என்பவருக்கும் எனக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தோம். நாளடைவில் அது காதலாக மாறியது. இந்நிலையில், பாண்டுராஜ், ‘ என்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறினார். இப்படியே 3 வருடங்கள் ஓடிவிட்டன. இப்படி காதலித்தால் என்னை எப்போது திருமணம் செய்து கொள்வாய் என்று கேட்டேன்.
இதற்கு, ‘கல்யாணத்துக்கு என்ன அவசரம்’ என்று கோபத்துடனும் அலட்சியத்துடனும் கூறினார். இதனால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், திடீரென பாண்டுராஜ், ‘எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. நான் உன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றார். இதனாக் நான் அதிர்ச்சியடைந்து அழுதேன். ‘இப்போது என்ன செய்ய வேண்டும்’ என்று அவரிடம் கேட்டபோது, ‘என்னால் ஒன்றும் செய்ய முடியாது, முடிந்தால் என்னுடன் வாழு’ என்றார். நான், என்னை ஏமாற்றிய பணம், நகைகளை திருப்பிக் கொடு , இல்லாவிட்டால் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலாத்காரம் செய்ததாக செல்போன் ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன் என்றேன்.
இதனால் ஆத்திரமடைந்த பாண்டுராஜ், என்னை தாக்கிவிட்டு, வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினார். மறுநாள் எனது வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் என்னை பீர் பாட்டிலால் தாக்கி செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்துவிட்டு செல்போன் மற்றும் லேப்டாப்பை பறித்து சென்றனர். எனவே, என்னை தாக்கிவிட்டு தப்பியோடிய தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி பாண்டுராஜ் மீது பலாத்காரம், கொலைமிரட்டல், ஆபாச வார்த்தை, பணமோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தம்பதியை கைது செய்வதற்காக வீட்டுக்குச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
தனிப்படை போலீசார் சோதனையிட்டபோது, அவர்களது செல்போன் எண் சென்னை ஏரியா குறியீட்டை காட்டியது. நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் விரைந்து வந்து ஒரு வீட்டிற்கு சென்று அதில் பதுங்கியிருந்த தம்பதியை பிடித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள், விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தம்பதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!