காங்கிரஸ் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 
காங்கிரஸ்


 
மகாராஷ்டிர மாநிலத்தில் 288 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்  2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை மேற்கொண்டது.

காங்கிரஸ்

இதனையடுத்து  இன்று  வெளியிடப்பட்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 23 பெயர்கள்  வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்  இதுவரை மொத்தம் 71 வேட்பாளர்களைக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி விரைவில் அறிவிக்கும். அக்டோபர் 24ம் தேதி  காங்கிரஸ் வெளியிட்ட முதல் பட்டியலில் 48 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.  

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 நடைபெறும்.  காராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதிப் பங்கீடு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ், சிவசேனை (யுபிடி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய 3 கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 23 இடங்களில் அந்தந்த கட்சி வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web