குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை! மருத்துவர்கள் விளக்கம்!

 
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை! மருத்துவர்கள் விளக்கம்!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமூச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகன் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. தற்போது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடலாம் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை! மருத்துவர்கள் விளக்கம்!

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஒழுங்குமுறை முடிவு மட்டுமே. பெரிய அளவில் கொரோனா பரவலுக்கு குழந்தைகள் காரணமாக மாட்டார்கள். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கொரோனா முடிவுக்கு வந்து விடாது.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை! மருத்துவர்கள் விளக்கம்!


குழந்தைகளுக்கு போடுவதற்கு அங்கீகாரம் பெறுகிற எந்தவொரு தடுப்பூசியும், சவப்பெட்டிக்கான கடைசி ஆணி கிடையாது. கொரோனா தடுப்பூசியை பெரியவர்கள் மட்டும் செலுத்திக் கொண்டால் போதுமானது. வழிகாட்டும் நெறிமுறைகளை பெரியவர்கள் பின்பற்றினாலே போதும். குறிப்பாக முதியவர்கள், இணை நோய் உடையவர்கள் போன்றோர்கள் மட்டுமே தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்தினாலே போதும் எனத் தெரிவித்துள்ளார்.


இதே கருத்தை இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய பணிக்குழு உறுப்பினரான டாக்டர் ராஜீவ் ஜெயதேவனும் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பில் குழந்தைகள் கொரோனா வைரசின் மோசமான பாதிப்புகளை சந்திக்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பயனற்றதாகத்தான் அமையும் என தெரிவித்துள்ளார்.

From around the web