விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ஆதரவு இல்லை... தவெக அறிவிப்பு!

 
விஜய்

  
 தமிழகத்தில் ஜூலை 10ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்  எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தவெக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்  புஸ்ஸி ஆனந்த் பிப்ரவரி  2ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

தவெக

கழகத் தலைவர் விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிடுவார். அதனையடுத்து  உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள்  என 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வோம். இதுவே  நமது பிரதான இலக்கு என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி
அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது  குறிப்பாக ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என தவெக  தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web