மேலும் 2 நாட்களுக்கு மொபைல் இணைய சேவை துண்டிப்பு... மணிப்பூரில் பதட்ட நிலை!
மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு மொபைல் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், கக்சிங், பிஷ்ணுபூர், தௌபால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் மணிப்பூரில் இணையதள சேவை நவம்பர் 16ம் தேதி தேதி முடக்கப்பட்டது. அதில் பிராட்பேண்ட் இணைய சேவை நவம்பர் 19ம் தேதி மீண்டும் வழங்கப்பட்ட நிலையில் மொபைல் இணைய சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே 2023 ம் ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இரு சமூகத்தினா் அடங்கிய தீவிரவாதக் குழுக்களும் தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாக உள்ளது.
இதுவரை 200க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இதனிடையே மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மாவட்டத்தில் குகி இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் எரித்துக்கொல்லப்பட்டனர்.அங்கிருந்த வீடுகளும் தீயிட்டு சூறையாடப்பட்டன. அதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் போராட்டக்காரர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மணிப்பூரில் தீவிரவாதிகளால் சமீபத்தில் சிலர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, போராட்டங்கள் வெடித்தன. மணிப்பூா் முதல்வரின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கினர். அத்துடன் அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீ வைத்ததால் தொடர்ந்து மணிப்பூரில் பதற்றம் நிலவி வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!