அதிர்ச்சி!! டெல்லி இருளில் மூழ்கும் அபாயம்!! கைவிரித்ததா மோடி அரசு!!

 
அதிர்ச்சி!! டெல்லி இருளில் மூழ்கும் அபாயம்!! கைவிரித்ததா மோடி அரசு!!

தமிழகத்தில் சரியான நிர்வாக திட்டமிடல் இல்லாமல் திமுக தலைமை, மின் பற்றாக்குறை மாநிலமாக மாற்றி விட்டு, அடுத்த தேர்தலில் ஆட்சியையும் இழந்தது. அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் சில மாதங்களிலேயே மின் பற்றாக்குறை நிலைமை சரிசெய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது மீண்டும் ஒரு முறை ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு மின்பற்றாக்குறை பெரும் சவாலாக இருக்கும் போல!

அதிர்ச்சி!! டெல்லி இருளில் மூழ்கும் அபாயம்!! கைவிரித்ததா மோடி அரசு!!

இந்த அஸ்திரத்தை மத்திய அரசும் கையில் எடுத்திருப்பதாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இன்னும் கையிருப்பு மின் உற்பத்தி அடுத்த 3 நாட்களுக்கு தான் டெல்லிக்கு பங்களிக்கும். அதன் பிறகு டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது என கதறுகிறார் கெஜ்ரிவால்.

மின் உற்பத்தி குறித்து டெல்லி உள்பட ஆறு மாநிலங்கள் தங்களது கவலையை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன. டெல்லிக்கு மின் விநியோகம் அளிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் கெஜ்ரிவால். இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், அதன் பின்னர் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

அதிர்ச்சி!! டெல்லி இருளில் மூழ்கும் அபாயம்!! கைவிரித்ததா மோடி அரசு!!

டெல்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக கவலை தெரிவித்துள்ளன. பஞ்சாபில் நிலைமை இன்னும் மோசம். இப்போதே அங்கு சுழற்சி முறையில் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா சமயத்திலும், டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட்டது. பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதால், அங்கே இப்போதே மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இங்கே தமிழகத்திலும் பாஜக பெரும் தோல்வியை சந்தித்ததால், மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதெல்லாம் பாஜக திட்டமிட்டே பழிவாங்குகிறது என்கிற குரல்களும் ஒலிக்க துவங்கியுள்ளன.

From around the web