தீபாவளிக்கு பட்டாசே வெடிக்கிறதில்ல... அதிசய கிராமம்..!!
நாடு முழுவதும் நாளை மறுநாள் நவம்பர் 12ம் தேதி தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தீபாவளியே கொண்டாடாமல் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த குன்னம் ஊராட்சி பெரம்பூரில் வயல்வெளிகள் நிறைந்த பகுதியில் ஒரு ஆல மரம் அமைந்துள்ளது. இந்த ஆலமரத்தில் பழந்தின்னி வவ்வால்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இதனால் சுற்றுவட்டார பகுதியில் விளைநிலங்களில் வவ்வால்கள் இடும் எச்சங்கள் உரங்களாகி வருகின்றன. இந்த வவ்வால்கள் விளைச்சலுக்கு பெரும் உதவியாக இருந்து வருகின்றன. இதனால் இந்த வவ்வால்களை அப்பகுதி கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். விவசாயிகளின் நண்பனாக காலம் காலமாக இப்பகுதியில் வவ்வால்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன . இந்த வவ்வால்கள் தங்கியுள்ள பகுதி வவ்வால் அடி என அழைக்கப்படுகிறது.
இந்த ஆலமரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன. இதனால் வவ்வால்கள், பறவைகள் பறந்து சென்று விடக்கூடாது என்பதற்காக காலம் காலமாக இந்த பகுதியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் “ பழந்தின்னி வவ்வால்கள் விவசாயத்துக்கு உதவுகிறது. எனவே அவற்றை காக்க பல ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் தீபாவளி பண்டிகையின்போது நாங்கள் பட்டாசு வெடிப்பதில்லை” எனக் கூறியுள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!