அசத்தல் !! புத்தாண்டில் வழிபாட்டுக்கு தடையில்லை !!

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் இரவு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், கோவிலில் அனுமதி இருக்குமா? என பக்தர்கள் பலரும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ‘புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை. பக்தர்கள் வழக்கம் போல் நள்ளிரவு 12 மணி பூஜைகளில் சாமி தரிசனம் செய்யலாம். அதேசமயம், தனி மனித இடைவெளி, முக கவசம் போன்ற விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.