செம.. பீலேவை பின்னுக்கு தள்ளிய நெய்மர்..!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!
பிரேசில் கால்பந்து ஆட்டத்தில் ஜாம்பவான் நெய்மர். இவர் 2010 முதல் பிரேசில் அணிக்காக விளையாடி வருகிறார். தனது 18வது வயதில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் 2026ல் நடைபெற உள்ளன. அதற்காக தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
The moment Neymar eclipse the Legend as the highest goal scorer for Brazil pic.twitter.com/nB8Ami8qTk
— Lidady (@lidadiFCB) September 9, 2023
இதற்காக நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பொலிவியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இந்த ஆட்டத்தில் பிரேசில் வீரர் நெய்மார் 2 கோல்கள் அடித்தார். இதன் மூலம், பீலேவின் 77 கோல் சாதனையை முறியடித்துள்ளார்.
அதே நேரத்தில் பிரேசிலின் அதிக கோல்கள் அடித்த வீரராக நெய்மார் மாறியுள்ளார். ரசிகர்கள் இந்த செய்தியால் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். நெய்மர் தமது அறிமுக ஆட்டத்திலேயே கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். அப்போது முதல் அடுத்தடுத்து கோல் மழையைப் பொழிந்து வருகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!