நியூசிலாந்து பிரதமர் கார் விபத்து...

 
நியூசிலாந்து


 
நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்ஸன் மற்றும் அந்நாட்டு நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ் இருவரும் நேற்று நவம்பர் 27ம் தேதி புதன்கிழமை  வெலிங்டனில் உள்ள விமான நிலையத்திற்கு லிமௌசின் காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்றம் செல்லும் பிரதான சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் கார் பின்னால் மற்றொரு போலீஸ் கார் மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் காரின் பின்புறம் பலத்த சேதமடைந்தது. இருப்பினும், காரினுள் பயணித்த பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, தாங்கள் நலமுடன் இருப்பதாக பிரதமர் கிரிஸ்டோபர் லக்ஸன் செய்தி நிறுவனங்களிடம் அறிவித்தார்.இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அரசு வாகனங்களின் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் உள்நாட்டு விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web