ஆகஸ்ட் 1 முதல் புதிய கிரெடிட் கார்டு விதிமுறைகள்!
இந்தியாவில் செயல்பட்டு வரும் முண்ணனி வங்கி நிறுவனங்களில் ஒன்று எச்டிஎப்சி வங்கி. இந்தியா முழுவதும் எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்களை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி கிரெடிட், காசோலை, மொபிக்விக், ஃப்ரீசார்ஜ் போன்ற தலங்களில் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரூ15000க்கு மேல் எரிபொருள் கட்டணம் ஒரு சதவீதம் செலுத்த வேண்டும். HDFC Tata New Infinity மற்றும் Tata New Plus கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், Tata New UPI ஐடி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இப்போது 1.5 சதவீத நாணயங்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!